அரசியல்
மொட்டு கட்சியை சாடிய ராஜித சேனாரத்ன
மொட்டு கட்சியை சாடிய ராஜித சேனாரத்ன
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் உண்மையான நிலை தெரியவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று மஹரகமவுக்கு கொண்டு செல்லப்பட்ட சீத்தா யானையை பார்வையிட சென்ற போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரகலய சம்பவத்தின் பின்னரும் பாடம் கற்கவில்லை, அவர்கள் தமது கட்சி பற்றி மாத்திரமே பேசுகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ பேசுவதில்லை அவர்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு மாத்திரமே விரும்புகின்றனர்.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் உண்மையான நிலை தெரியவரும் என கூறியுள்ளார்.