rtjy 311 scaled
இலங்கைசெய்திகள்

கடையடைப்பு நாளில் 2500 ரூபாவிற்காக தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றம் வந்தார்கள்

Share

கடையடைப்பு நாளில் 2500 ரூபாவிற்காக தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றம் வந்தார்கள்

வடக்கு – கிழக்கில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த தமிழ் தலைவர்கள் நான்கு பேர் கடையடைப்புக்கு செல்லாமல் 2500 ரூபாவுக்காக நாடாளுமன்றம் வந்தார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் போராட்டங்களை வரவேற்கிறேன். போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அன்றையதினம் 2500 ரூபா கொடுப்பனவுக்காக நாடாளுமன்றம் வந்ததை அவதானித்தேன்.

நான் அவர்களில் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. யார் என அறிய வேண்டும். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அவர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடியும்.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் மக்களின் நாளாந்த வருமானத்தை இழக்க வைக்க கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துவிட்டு தாங்கள் நாடாளுமன்றத்தில் சலுகைகளை அனுபவிக்க வந்தார்கள்.

நாடாளுமன்றம் செல்ல மக்கள் ஆணை பெற்றவர்கள் போராட்டம் என்ற போர்வையில் தொழில்களை நிறுத்தி மக்களை வீதிகளில் இறக்கிவிடு தாங்கள் சுக போகங்களை அனுபவிப்பவர்கள் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது” என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...