tamilni 220 scaled
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சர்ச்சை

Share

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சர்ச்சை

மின் கட்டணங்கள் தொடர்பான சமீபத்திய தரவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதம் முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மின்சார சபை மேற்கொண்ட அனுமானங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கு நாளொன்றுக்கு 44.70 ஜிகாவோட் மணிநேர மின் தேவை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டாலும், உண்மையான தேவை 41.01 ஜிகாவோட் மணிநேரம் என்று அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் நிலக்கரியின் விலை 68.60 ரூபாவிலிருந்து 52.60 ரூபாவாக குறைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, மின்சார சபை சமர்ப்பித்துள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள கோரிக்கையை குறைந்தபட்ச தரவுகளை கொண்டு உறுதிப்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...