இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு எவருமே சவாலாக மாட்டார்கள்

tamilni 111 scaled
Share

ரணிலுக்கு எவருமே சவாலாக மாட்டார்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு எவரும் சவாலாக அமையமாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். தேர்தலைப் பிற்போடும் எண்ணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (10.10.2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறான எந்த எண்ணமும் அரசுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ இல்லை. அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடமே இடம்பெற இருக்கின்றது. அதனால் உரிய காலத்தில் தேர்தல் இடம்பெறும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு தயாராகப் போகின்றது, அதற்கான வேலைத்திட்டங்கள் என்ன என்பவை தொடர்பாக கடைசியாக இடம்பெற்ற கட்சியின் செயற்குழுவின்போது நாங்கள் கலந்துரையாடி இருந்தோம்.

அதனால் எதிர்க்கட்சியினர் தங்களின் பிரசாரத்துக்காக எந்த அடிப்படையும் இல்லாத விடயங்களைத் தெரிவி்த்து மக்களைக் குழப்பி வருகின்றனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான எந்த யோசனையும் தெரிவிக்கப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருக்கின்றபடியாலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தீர்மானங்களை விரைவாக முன்னெடுக்க முடியுமாகி இருக்கின்றது.

அதனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைத் தற்போதைக்கு இல்லாமலாக்க எந்தத் திட்டமும் இல்லை.

ஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும். அதனால் எதிர்காலத்தில் அனைவருடனும் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளலாம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக தம்மிக்க பெரேரா தெரிவித்திருக்கின்றார். அது அவருடைய உரிமை. அவரைப் போன்று ஜனாதிபதியாகக் கனவு காண்பவர்கள் பலரும் இருக்கின்றனர்.

என்றாலும் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை மீட்பதற்கு யாரும் முன்வராத நிலையில் இந்த நாட்டை மீண்டும் ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவர யார் நடவடிக்கை எடுத்தது என்பது மக்களுக்குத் தெரியும்.

அதனால் தம்மிக்க பெரேராவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலாக அமையமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...