சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது
40இற்கும் மேற்பட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் யாழ். பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்றிரவு தொடக்கம் பொலிஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்றையதினம் (09.10.2023) கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரது வீட்டினை பொலிஸார் சுற்றிவளைத்த போது சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் மீது காலிற்கு கீழ் துப்பாக்கிச்சூடு நடத்தி காயம் ஏற்படுத்தி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.