இலங்கை

கொலை முயற்சி: துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள்

Published

on

கொலை முயற்சி: துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள்

வர்த்தகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவ வீரர்கள் இருவர் எல்பிட்டியவில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சிப்பாய்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் பாதாள உலக தலைவர் ரத்கம விதுரவின் உதவியாளர்கள் என தற்போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த வர்த்தகரை கொலை செய்வதற்காக அவரது வர்த்தக இடத்திற்கு அருகில் வந்திருந்த போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இராணுவ வீரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் விடுமுறைக்காக தமது ஊர்களுக்கு சென்று கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரான குறித்த வர்த்தகரை கொலை செய்யும் நோக்கில் அங்கு சென்றுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version