இலங்கை
சந்தன மடு ஆறு பெருக்கெடுப்பு


சந்தன மடு ஆறு பெருக்கெடுப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
அந்த வகையில், மட்டக்களப்பு – சித்தாண்டியில் இருந்து ஈரள குளத்துக்கு செல்லும் சந்தன மடு ஆறு இரண்டு நாட்களாக பெருக்கெடுத்ததன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரள குளம் செல்லும் பிரதான வீதியே இவ்வாறு நீர்பெருக்கெடுத்து காணப்படுகின்றது.
சித்தாண்டியில்இருந்து சுமார் 18 கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பிரதான வீதியில் உள்ள சந்தனமடு ஆற்றை கடப்பதற்கு நீண்ட காலமாக பாலம் ஒன்று அமைக்கப்படாமல் காணப்படுகின்றது.
ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் அங்கு செல்லும் மக்கள் பாரிய சிரமத்தை அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.