இலங்கை

இலஞ்சம் பெற்ற பொறியியலாளர் கைது

Published

on

இலஞ்சம் பெற்ற பொறியியலாளர் கைது

அம்பாந்தோட்டை மாவட்ட பிரதம பொறியியலாளர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் சாரதி ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பது இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் முறைப்பாட்டுக்கு அமைய நேற்று (05.10.2023) ஹம்பாந்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (06.10.2023) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் இருந்து அங்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version