tamilni 69 scaled
இலங்கைசெய்திகள்

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு

Share

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று அழுத்தங்கள், உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதென்பது ஒரு விடயம். ஆனால் அவர்களுடைய பதவிகளை பதவி விலகல் செய்வதென்பது என்னைப் பொறுத்தமட்டிலே சாலச்சிறந்ததாக இருக்காது.

ஏனென்றால் ஒட்டுமொத்தமாக பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கின்ற சூழல் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது.

இவ்வாறு குறிவைக்கப்படுகின்ற சூழலிலே நாங்கள் இந்த விடயத்தினை செய்வோமாக இருந்தால் நாடாளுமன்றத்திலே கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அற்று போவதாக இருக்கும்.

சர்வதேசத்திடம் உரிமையோடு கேட்கும் விடயங்கள் அனைத்தும் கேட்க முடியாத சூழல் உருவாகும். விடயத்திலே மீள் பரிசீலனை செய்யலாம்.

ஆனால் நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்ற சூழலிலே தட்டிக்கேட்கின்ற, நிறுத்துகின்ற வழிகளை கையாளுகின்ற ஒரு சூழல் சாத்தியமற்றது என்பது என்னுடைய கருத்து.

ஏனென்றால் தென்னிலங்கையிலே இருக்கின்ற இனவாதிகள் கூடுதலாக பௌத்த பிக்குகள் எங்களுடைய பூர்வீகத்தை ஒழிப்பதற்காக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றை சிதைப்பதற்காக முழு மூச்சோடு செயற்பட்டு கொண்டு வருகின்ற நிலையிலே நாடாளுமன்றத்தை துறந்தோமாக இருந்தால் நிலத்தையோ, மக்களுடைய பிரச்சினைகளையோ தட்டிக்கேட்கின்ற நிலைமை அல்லது சர்வதேசத்திடம் எடுத்து சொல்கின்ற நிலமைகள் சற்று மாறாக அமைந்துவிடும்.

ஆகவே இந்த விடயத்திலே இந்த காலகட்டத்தில் சரியானதொன்று அல்ல என்பது என்னுடைய கருத்து என மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...