Connect with us

இலங்கை

கைவிடப்பட்ட இராணுவம் முகாமுக்குள் திடீரென நுழைந்த பௌத்த பிக்கு

Published

on

rtjy 49 scaled

கைவிடப்பட்ட இராணுவம் முகாமுக்குள் திடீரென நுழைந்த பௌத்த பிக்கு

திருகோணமலை – கிண்ணியா குரங்கு பாஞ்சான் இராணுவ முகாம் காணிக்குள் சென்று வரும் பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பௌத்தப்பிக்கு உட்பட ஐவர் கார் ஒன்றில் நேற்றும் (03.10.2023), இன்றும் (04.10.2023) குரங்கு பாஞ்சான் முகாமுக்குள் வருகை தந்து செல்வதாக கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினர் எம். எம். மஹ்தி வான் எல் பொலிஸ் நிலையத்திற்கும், கிண்ணியா பிரதேச செயலாளருக்கும் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிண்ணியா பிரதேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் வாழ்ந்து வரும் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இராணுவத்தினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாமுக்குள் குறித்த பௌத்த மதகுரு உட்பட குழுவினர் சென்று வருவதினால் ஏதும் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கைவிடப்பட்ட இராணுவம் முகாமுக்குள் பௌத்த சிலைகளை வைப்பதற்கு முயற்சிக்கின்றார்களா அல்லது புதையல் தோண்டுவதற்கு ஏதாவது உட்படுகின்றார்களா எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில், கிண்ணியா பிரதேச மக்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் காலகட்டத்தில் இவர்களின் வருகை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்களும், நகர சபை உறுப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 19 ஜனவரி 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் அன்றைய நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 16.01.2025, குரோதி வருடம் தை மாதம் 3, வியாழக் கிழமை,...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 15.01.2025, குரோதி வருடம் மார்கழி 2, புதன் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 13 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 13 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 13.01.2025 குரோதி வருடம் மார்கழி 29, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 12 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.01.2025, குரோதி வருடம் மார்கழி 28 ஞாயிற்று கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள சேர்ந்த விசாகம், அனுஷம் நட்சத்திரத்திற்கு...