இலங்கை
இரு பேருந்துகள் மோதி விபத்து
இரு பேருந்துகள் மோதி விபத்து
பேருவளை பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (03.10.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – கொழும்புக்கிடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து மற்றும் கொழும்பு – கதிர்காமம் நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த 6 பேர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.