இலங்கை கிரிக்கெட் அணியில் களமிறங்கும் வியாஸ்காந்த்
ஆசிய விளையாட்டுப்போட்டி T20 கிரிக்கெட் போட்டியின் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் விளையாடி வருகிறார்.
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப்போட்டி சீனாவின் Hangzhou பகுதியில் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கால் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் இலங்கை அணிக்கான விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவுசெய்யப்பட்டு விளையாடி வருகிறார்.
மேலும் இப்போட்டியில் வியாஸ்காந்த், தனது முதலாவது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
தற்போது நிறைவடைந்துள்ள இப்போட்டியில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
Comments are closed.