இலங்கை

நீதிபதி சரவணராஜாவிற்கு நடந்தது இதுவே: முல்லைத்தீவில் சுமந்திரன்

Published

on

நீதிபதி சரவணராஜாவிற்கு நடந்தது இதுவே: முல்லைத்தீவில் சுமந்திரன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது. இந்த மோசமான நீதி புரழ்வு விவகாரத்தை சர்வதேசத்திற்கு உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

”தன்னுடைய கடமையினை செய்தமைக்காக அச்சுறுத்தப்பட்ட பிறகு உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் தனக்கு பெரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாகவும் கூறி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த விடயம் நம் நாட்டில் நீதித்துறை எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதன் வெளிப்பாடாக காணப்படுகிறது. இலங்கையின் நீதித்துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், எங்கள் நாட்டின் சரித்திரத்துடன் ஒன்றிய புதிய விடயமல்ல. ஒரு சில நீதிபதிகள் அழுத்தங்கள் காரணமாக பதவிகளை விட்டு நாட்டைவிட்டு வெளியேறிய தருணங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version