rtjy 11 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் சர்ச்சை

Share

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் சர்ச்சை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறியமை இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக Jurist என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Jurist என்பது சட்டம் மற்றும் நீதி தொடர்பான சர்வதேச இணையத்தளமாகும்.

நீதிபதியின் பதவி விலகல் கடிதம் கடந்த வியாழன் அன்று ஒன்லைனில் பரப்பப்பட்டதாக Jurist இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் தனது தொழில் வாழ்க்கை மீதான அதிக அழுத்தங்கள் காரணமாக தாம் வகிக்கும் அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கிய பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

குருந்தூர்மலை வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவை மாற்றுமாறு கடந்த மாதம் 21ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தம்மை அலுவலகத்திற்கு வரவழைத்து அழுத்தம் கொடுத்ததாக டி.சரவணராஜா குற்றஞ்சாட்டியதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு தொடர்பிலான முன்னாள் அமைச்சர் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பைக் குறைக்கும் வகையில் அதிகாரிகள் செயற்பட்டதாகவும், புலனாய்வுப் பிரிவினர் தம்மை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் நீதிபதி டி.சரவணராஜா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அவர் பதவி விலலுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...