rtjy 11 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் சர்ச்சை

Share

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலால் சர்வதேச ரீதியில் சர்ச்சை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறியமை இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக Jurist என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Jurist என்பது சட்டம் மற்றும் நீதி தொடர்பான சர்வதேச இணையத்தளமாகும்.

நீதிபதியின் பதவி விலகல் கடிதம் கடந்த வியாழன் அன்று ஒன்லைனில் பரப்பப்பட்டதாக Jurist இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் தனது தொழில் வாழ்க்கை மீதான அதிக அழுத்தங்கள் காரணமாக தாம் வகிக்கும் அனைத்து நீதித்துறை பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கிய பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

குருந்தூர்மலை வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவை மாற்றுமாறு கடந்த மாதம் 21ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தம்மை அலுவலகத்திற்கு வரவழைத்து அழுத்தம் கொடுத்ததாக டி.சரவணராஜா குற்றஞ்சாட்டியதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு தொடர்பிலான முன்னாள் அமைச்சர் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பைக் குறைக்கும் வகையில் அதிகாரிகள் செயற்பட்டதாகவும், புலனாய்வுப் பிரிவினர் தம்மை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் நீதிபதி டி.சரவணராஜா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அவர் பதவி விலலுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக Jurist இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...