இலங்கை

நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை

Published

on

நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை

நேற்று (01.10.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் 92 லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோல் 95 ஒக்ரெய்ன் லீட்டருக்கு 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 351 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீட்டருக்கு 62 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 321 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 242 ரூபாவாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version