இலங்கை

சாதனை படைக்கவுள்ள இலங்கை மின் கட்டண உயர்வு

Published

on

சாதனை படைக்கவுள்ள இலங்கை மின் கட்டண உயர்வு

உத்தேச மின் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென திலக் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், வரட்சியான காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவீனங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவிருந்த மின் கட்டண உயர்வை அக்டோபர் மாதமே தாம் கோரியுள்ளதாக மின்சாரசபையின் பொது மேலாளர் நரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள மின்சாரசபையின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version