இலங்கை

நீதிபதி சரவணராஜா தொடர்பில் ரணில் விடுத்துள்ள பணிப்புரை

Published

on

நீதிபதி சரவணராஜா தொடர்பில் ரணில் விடுத்துள்ள பணிப்புரை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியமை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் முழுமையான அறிக்கை விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டமை சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக, நீதிபதிக்கு காணப்பட்ட உயிரச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமான முழுமையான விசாரணைகளை தற்போது பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த விசாரணைகளுக்கு புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களும் பயன்படுத்தப்படவுள்ளன. விரைவில் முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version