இலங்கை
இலங்கையில் IORA மாநாடு
இலங்கையில் IORA மாநாடு
இந்திய பெருங்கடல் வட்டார (IORA) மாநாடு ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 23 வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் பல வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர்.
23 பிரதான நாடுகளை தவிர IORA மாநாட்டில் கண்காணிப்பு மட்டத்தில் மேலும் 10 நாடுகள் கலந்துகொள்ள உள்ளன.
இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், எகிப்து ஆகிய நாடுகளும் அடங்கும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் IORA மாநாட்டில் உலக பொருளாதார வழிமுறைகளை உருவாக்குதல், பிராந்தியத்திற்கு பொதுவான சவால்களை வெல்வது, சுற்றுலா, கலாசார துறைகளில் முன்னேற்றத்திற்கான திட்டங்களை போன்ற பிரதான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
IORA மாநாடு ஒக்டோபர் மாதம் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.