rtjy 317 scaled
இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் போராட்ட காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டு: பிரித்தானிய பெண் கூறியுள்ள விடயம்

Share

காலிமுகத்திடல் போராட்ட காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டு: பிரித்தானிய பெண் கூறியுள்ள விடயம்

இலங்கையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கிளர்ச்சி காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண், தாம் தொடர்ந்தும் இலங்கையில் தலைமறைவு வாழ்க்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13 மாதங்கள் மறைந்திருந்த நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான Kayleigh Fraser, இலங்கையில் தங்கியிருந்தபோது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடியேற்ற அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது அவர் தவறான விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினார்.

Fraser, தனது இன்ஸ்டாகிராமில் காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை பகிரத் தொடங்கிய பின்னரே, அதிகாரிகள் அவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

அத்துடன் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இலங்கையின் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் பிறப்பித்த நாடுகடத்தல் உத்தரவை உறுதி செய்தது.

எனினும் நாட்டின் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தாம் பயப்படுவதாக Fraser கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃப் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய்ன் நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது Fraser இலங்கை நாட்டை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படுவார் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய உத்தரவாதங்கள் வழங்கப்படும், தாம் மறைவிலிருந்து வெளியே வர முடியாது என்று Fraser கூறியுள்ளார். இலங்கையில் தற்போது தாம் வாழும் வாழ்க்கையை வாழ்க்கையாக அங்கீகரிக்கவில்லை.

இங்கே அதிகாரத்தில் இருக்கும் இந்த பைத்தியக்காரர்களின் தயவில் ஒட்டுமொத்த உலகமும் தம்மை கைவிட்டது போல் தாம் உணர்வதாக Fraser தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...