rtjy 287 scaled
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் பாதிப்பு

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் பாதிப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானப் பயணங்கள் இன்று தடைப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷின் டாக்கா நகர் நோக்கி பயணிக்கவிருந்த UL 189 இலக்க விமானம், தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானமையினால் பயணத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

குறித்த விமானப் பயணம் தாமதமடைந்தமையினால், பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவிருந்த UL 153 இலக்க விமானத்தின் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவின் சென்னை நோக்கி பயணித்த UL 141 இலக்க விமானத்தை தரையிறக்குவதில் இன்று(28) காலை தாமதம் ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...