இலங்கை

அழுகிய முட்டை இறக்குமதி

Published

on

அழுகிய முட்டை இறக்குமதி

அரசாங்கம் தரம் குறைந்த முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகிப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறு அழுகிய முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய கொடுக்கல் வாங்கல் மோசடி நடைபெறுவதாகவும் அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணையத்தள ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்திய முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய தரகு மோசடி நடைபெறுவதாகவும் , அரச வர்த்தக (பல்வேறு) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் சிலர் இணைந்து செய்வதாகவும், அதனை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் இந்தியாவில் இருந்து அகற்றப்படும் பாவனைக்கு உதவாத முட்டைகள் இந்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாகவும், குறைந்த விலைக்கு முட்டைகள் கிடைத்தாலும் சந்தைக்கு வரும்போது விலை பெருமளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிக்கப்பட்டால் பொரளை சந்தியில் நிற்கத் தயார் எனவும் தனது குற்றச்சாட்டுகள் சரியென நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version