இலங்கைசெய்திகள்

யாழ் முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயம்

Share
tamilni 360 scaled
Share

யாழ் முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயம்

யாழ். மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது, அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (27.09.2023) மாலை நடந்த விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரியவருகையில், கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் தற்போது சேவையில் ஈடுபடும் ஓர் தனியார் முச்சக்கரவண்டிச் சேவை தொடர்பாகப் பிரஸ்தாபித்தனர்.

அந்தத் தனியார் நிறுவனத்தில் பதிவு செய்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் குறைந்த கட்டணத்தை வசூலிக்கின்றன என்றும் அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டிகளுக்கு “மீற்றர்” பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு பணம் செலவிட்டு தாங்கள் மீற்றர் பொருத்திவரும் நிலையில், தனியார் நிறுவனத்தின் சேவை தங்களுக்கு வருமான இழப்பை ஏற்படுத்துகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அவர்களுக்குப் பதிலளித்த யாழ்ப்பாண மாவட்டச் செயலர், பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் “மீற்றர்” பொருத்த வேண்டும் என்பது சட்டம், அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

அதேவேளை, உரிய அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும் தனியார் நிறுவன பயணிகள் சேவையை தடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று பதிலளித்தார்.

“மீற்றர்” பொருத்தப்பட்டு சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பிலும் பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர். மீற்றர் கட்டணத்துக்கு அதிகமாகச் சிலரால் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

ஆயினும், தனியார் முச்சக்கர வண்டிச் சேவை தொடர்பாக இதுவரை எந்த முறைப்பாடுகளும் எமக்குக் கிடைக்கவில்லை என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் “மீற்றர்” பொருத்தாத குற்றச்சாட்டின் கீழ் 800 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...