சாய்ந்தமருது பிரதேச சபையை சஹ்ரானுக்கு வழங்கிய கோட்டாபய
சாய்ந்தமருது பிரதேச சபையை சஹ்ரானுக்கு இலஞ்சமாக கோட்டாபய வழங்கியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து முற்றிலும் பொய்யானவை என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சஹ்ரானை சார்ந்த அனைத்து பயங்கரவாதிகளையும் காட்டிக்கொடுத்தவர்கள் சாய்ந்தமருது மக்களே தவிர புலனாய்வு பிரிவினர் அல்ல என்றும் கூறியுள்ளார்.
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியை இல்லாமல் செய்ய இவ்வாறு பொய்யான வதந்தியை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 2012 ஆம் ஆண்டிலிருந்து சஹ்ரானுக்கு இராணுவ புலனாய்வாளர்களால் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக சரத்பொன்சோகா தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.