இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள்
இலங்கையில் தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (21.09.2023) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாகவே 1,467 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.
அத்துடன் தற்போது பேருந்துகள் மற்றும் டிரக்குகள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.