இலங்கை
கஜேந்திரனுக்கு நேர்ந்த கதியே நாளை சுமந்திரன் – சாணக்கியனிற்கும்!
கஜேந்திரனுக்கு நேர்ந்த கதியே நாளை சுமந்திரன் – சாணக்கியனிற்கும்!
திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட ஊர்திப்பவனியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்கப்பட்டமையானது மோசமான வன்முறை என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட இந்த போன்ற கொலைவெறி தாக்குதலினை தடுக்காவிட்டால் கஜேந்திரனுக்கு நடந்தது நாளை சுமந்திரனுக்கும், சாணக்கியனிற்கும் இடம்பெறலாம்.
குறித்த பேரணியின் போது மக்கள் கூட்டம் காணப்படாமையே இந்த தாக்குதல் சர்வதேச ரீதியில் ஈர்க்கவில்லை எனவும், இவ்வாறான போராட்டங்களுக்கு முதலில் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.