இலங்கை
கொழும்பில் மனைவி! கணவன் எடுத்த முடிவு
கொழும்பில் மனைவி! கணவன் எடுத்த முடிவு
பூண்டுலோயா – ஹரோவத்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரொருவர் விஷம் கலந்த உணவினை தனது இரண்டு பிள்ளைகளுக்கு வழங்கி தானும் உட்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
11 மற்றும் 8 வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கே இவ்வாறு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது.
மனைவி தனக்கு தெரிவிக்காமல் கொழும்பிற்கு வேலைக்கு வந்த காரணத்தினால் மனமுடைந்த கணவர், குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்துகொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தந்தை மற்றும் இரண்டு குழந்தைகளும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.