tamilni 251 scaled
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பு

Share

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பு

.2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இத்தகவலை கல்வி அமைச்சர் நேற்று (19.09.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நடாத்தி, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படலாம்.

அத்துடன் அடுத்த வருட (2024 ஆண்டுக்குரிய) உயர்தரப் பரீட்சை வழமை போல் நடத்தப்படலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் குறித்த யோசனையை ஏற்றுக்கொண்ட போதிலும் இறுதி முடிவு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உள்ளது என்று வலியுறுத்தினார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உடனடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிடுமாறு கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...