இலங்கை
இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
அண்மையில் அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த உத்திக பிரேமரத்ன என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர். யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்? அவர்களுக்கு அந்த துப்பாக்கி எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு பொறுப்புடைய அமைச்சர் பதில் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 19.09.2023 இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கடந்த ஞாயிற்றுக் கிழமை 17ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்தியூடாகச் சென்ற போது இராணுவ புலனாய்வாளர்களது முன்னிலையில் குறிப்பிட்ட ஒருசிலரால் தாக்கப்பட்டுள்ளார். மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அதை ஏன் பொலிஸார் தடுக்கவில்லை என்ற ஒரு கேள்வி இருக்கின்றது.
இன்றுவரை ஏன் அந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் இருக்கின்றது. இதனை மிகவும் ஒரு கண்டிப்புடன் இந்த சபையில் பதிவு செய்கின்றேன்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரின் முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளார். இது உண்மையாக எங்களது மக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இது இருக்கின்றது.
அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இதனை தீர்ப்பதற்குரிய வழிவகைகளை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் இதனுடைய தொடர்ச்சி மிக மோசமானதாக இருக்கும். நாளடைவில் இன்னும் தாக்குதல்கள் அதிகரிக்கும்.
அண்மையில் அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த உத்திக பிரேமரத்ன என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர். யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்? அவர்களுக்கு அந்த துப்பாக்கி எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு பொறுப்புடைய அமைச்சர் பதில் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.