அரசியல்
சஜித்துடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்
சஜித்துடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கை மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்துப் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார்.
நேற்று (04.09.2023) இடம்பெற்ற இந்த சந்திப்பில் சமூக நீதி, ஜனநாயகத்துக்கான பொதுவான பயணத்தின்போது இணைந்து செயற்படுவதற்கு இதன்போது அவர் இணக்கம் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலகட்டத்தில் சுயாதீன அணியாகச் செயற்பட்டார். மேலும் விமல் தரப்புடனும் இவர் கூட்டணி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.