இலங்கைசெய்திகள்

வவுனியா மாணவிகள் பளு தூக்கல் போட்டியில் சாதனை

Share
tamilni 233 scaled
Share

வவுனியா மாணவிகள் பளு தூக்கல் போட்டியில் சாதனை

அகில இலங்கை பாடசாலை ரீதியிலான பளு தூக்கல் போட்டி கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை – ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளான டி.கோசியா (under 17) 45 kg எடை பிரிவில் 95kg எடை தூக்கி 1ம் இடத்தையும், ஏ.கவிஜெலினி (under 17) 81kg எடை பிரிவில் 78kg எடை தூக்கி 2ம் இடத்தையும், ஆர்.தாரணியா (under 20) 87kg+ எடை பிரிவில் 97kg எடை தூக்கி 4ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும், வவுனியா பெரிய கோமரசங்குள மகா வித்தியாலயம் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற போட்டியில் மாணவிகள் பங்குபற்றி பி.மேரி அசெம்ரா (under 20) 55kg எடை பிரிவில் 77kg எடை தூக்கி 3ம் இடத்தையும் பா.கிசாளனி (under 20)49kg எடை பிரிவில் 65kg எடை தூக்கி 6ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் ஞா. ஜீவன் ஆசிரியரின் பயிற்றுவிப்பில் பயிற்சி பெற்று இறம்பைக்குளம் மகாவித்தியாலய பொறுப்பாசிரியராக J.D.ரெஜினோல்ட் பெரேரா மற்றும் பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரிய டெய்சி ஆகியோரின் பங்களிப்புடனும் பெரிய கோமரசன்குளம் பொறுப்பாசிரியராக கி.அம்பிகா மற்றும் பாடசாலை அதிபர் S. வரதராஜா ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் போட்டியில் பங்குபற்றி வெற்றியினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...