அரசியல்
சனல் 4 காணொளியால் ராஜபக்சக்களுக்கு நெருக்கடி
சனல் 4 காணொளியால் ராஜபக்சக்களுக்கு நெருக்கடி
சனல் 4 விவகாரம் தொடர்பில் ராஜபக்சக்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பதும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழுவொன்றை நியமித்துள்ளமையும் ஒன்றுக்கொன்று முரணானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டை மறுத்த போது அது தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தாரா? என முஜுபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளமை ஜனாதிபதிக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பிய முஜுபுர் ரஹ்மான், அதற்கான அறிவிப்பை தாம் வெளியிட்டதாக பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு அமைச்சரிடம் கூறவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இந்த முரண்பாடான நடத்தை விடயத்தில் முறனான இரண்டு கருத்துக்கள் இருப்பதையே காட்டுகிறது என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தின் போது அவர்மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை நிராகரித்தவர் பாதுகாப்புச் செயலாளர் என இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.