rtjy 185 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Share

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான உட்பாய்ச்சல்கள் என்பன உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய பல குற்றங்கள் பணம் தூயதாக்கலுக்குப் பங்களிப்புச்செய்வதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார்துறை பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 2021/2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல் என்பன தொடர்பில் காணப்பட்ட இடநேர்வு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல் என்பவற்றுக்கான சாத்தியப்பாடு நடுத்தர அளவில் இதில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடநேர்வு அறிக்கையானது இலங்கையில் பதிவான பணம் தூயதாக்கல் முறைமைகள், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல், இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள், இத்தகைய செயற்பாடுகளுக்கான இடர்நேர்வுகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

இம்மதிப்பீட்டின் பிரகாரம் போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான உட்பாய்ச்சல்கள் என்பன உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய பல குற்றங்கள் பணம் தூயதாக்கலுக்குப் பங்களிப்புச்செய்வதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அவற்றுக்கு மேலதிகமாக மோசடிகள், கொள்கை, சூழல் மற்றும் இயற்கை வளங்கள் சார்ந்த குற்றங்கள், ஆட்கடத்தல், வரிக்குற்றங்கள், சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடற்றொழில் என்பனவும் பணம் தூயதாக்கலுடன் தொடர்புபட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இம்மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டு, நாட்டில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்க நிதியளித்தல் ஆகியவற்றுக்கு எதிரான தேசிய கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...