இலங்கை
மகிந்தவின் தோல்வியால் 100 பில்லியன் டொலர்களை இழந்த இலங்கை
மகிந்தவின் தோல்வியால் 100 பில்லியன் டொலர்களை இழந்த இலங்கை
அன்று 2015இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்காவிட்டால் இன்று 100 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கை அபிவிருத்தி அடைந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலுள்ள, கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் ஆகியோரை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எமது கிராமங்களில் அஸ்வெசும திட்டம் தொடர்பில் பெரிதும் பேசப்பட்டது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்த சமுர்த்தியை குறைந்தது ஒரு வருடமாவது நீடிக்கச் செய்தாலே இது சாத்தியமாகும் என நாங்கள் நினைக்கின்றோம்.
உடனடியாக இந்த நடவடிக்கைகளை நிறுத்தினால் மக்களுக்கு நியாயம் கிடைக்காது. அதேசமயம், அஸ்வெசும திட்டத்தினால் மக்களுக்கு கிடைக்கவுள்ள பயனும் கிடைக்காமல் போகும்.
அன்று 2015இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்காவிட்டால் இன்று 100 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கை அபிவிருத்தி அடைவது மாத்திரம் அல்ல அம்பாந்தோட்டை மாவட்டத்தை தெற்காசியாவில் சிறந்த பொருளாதார வலயமாக மாறியிருக்கும். துரதிஷ்டவசமாக அதனை செய்ய முடியாமல் போனது என குறிப்பிட்டுள்ளார்.