Connect with us

அரசியல்

முடிந்தால் தேர்தலில் வென்று காட்டிவிட்டு எம்மை விமர்சியுங்கள்

Published

on

tamilni 181 scaled

முடிந்தால் தேர்தலில் வென்று காட்டிவிட்டு எம்மை விமர்சியுங்கள்

ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள், மக்கள் ஆணையுடன் தான் அது நடக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு தேர்தலில் வென்று காட்டிவிட்டு எம்மை விமர்சியுங்கள் என்று சஜித்திடம் நான் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்சக்கள் சதித் திட்டங்களால் வீழ்ந்த வரலாறும் உண்டு. அவர்கள் மக்கள் ஆணையுடன் மீண்டெழுந்த வரலாறும் உண்டு.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் மார்தட்டிக் கொண்டு வீர வசனங்கள் பேசுகின்றனர்.

ஆனால், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சி இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.

எமது கட்சிக்குள் இருந்துகொண்டு சிலர் தனிப்பட்ட ரீதியில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு கட்சியின் தலைமை பொறுப்பு அல்ல.

ராஜபக்‌ச குடும்பத்தினரின் மீளெழுச்சிக்கு மக்கள் எவரும் இடமளிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்தக் கருத்து சிறுபிள்ளைத்தனமானது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் மண்கவ்வியதை மறந்து விட்டார் போல்.

ஜனாதிபதி பதவிக்கும், பிரதமர் பதவிக்கும் ஆசைப்பட்டு இறுதியில் தோற்றுப்போன சஜித் பிரேமதாசவுக்கு ராஜபக்சக்களை விமர்சிக்கவோ அல்லது மொட்டுக் கட்சியை விமர்சிக்கவோ எந்த அருகதையும் கிடையாது.

ஏதாவது ஒரு தேர்தலில் வென்று காட்டிவிட்டு எம்மை விமர்சியுங்கள் என்று சஜித்திடம் நான் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது....

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் : 6 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 20, புதன் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 5 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 5 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 5.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 19, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம்,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 4 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 4 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 4.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 17, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 3 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 3 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 3.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 17 ஞாயிற்று கிழமை, சந்திரன் விருச்சிக...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscopeமேஷம் ராசி பலன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 1 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 1 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 1.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 15 வெள்ளிக் கிழமை, சந்திரன்...