rtjy 131 scaled
இலங்கைசெய்திகள்

அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் வழக்கு தாக்கல்

Share

அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் வழக்கு தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய தகவல்களை சனல் 4 ஆவணப்பதிவு ஊடாக வெளிப்படுத்திய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் முன்னாள் ஊடக செயலாளர் அசாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டிற்கமைய நேற்று (12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அசாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை மறுமணம் செய்து பின்னர் மட்டக்களப்பு தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து குடும்பம் நடாத்திய நிலையில் தன்னை ஏமாற்றி தலைமைறைவாகி உள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் குற்றச்சாட்டினை முன்வைத்து தற்போது அசாத் மௌலானாவின் வெளிநாட்டு தஞ்சம், நாடு கடத்தப்படுதல் என்பன மறுக்கப்பட்டு இவ்வழக்கினை மேலும் வலுவாக்குவதற்கு மூன்றாம் தரப்பொன்று முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
sachin tendulkar virat kohli sportstiger 1694859677789 original
விளையாட்டுசெய்திகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி – உலக சாதனை!

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சர்வதேச ஒருநாள் (ODI) மற்றும் ரி20...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்க...

25 68fc4bb76f874
இலங்கைசெய்திகள்

பேருவளையில் வெள்ளை வேனில் கடத்தல்: முகமூடி அணிந்த குழுவினர் கைது செய்யப்படலாம்!

பேருவளையில் (Beruwala) வெள்ளை வேனில் முகமூடி அணிந்த ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின்...

25 68fc8ee613459
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: சிறையில் அடைக்கப்பட்ட ‘மிதிகம ருவான்’ மீது பொலிசார் விசாரணை!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதேச...