இலங்கை
யாழில் தனியார் விடுதியொன்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு
யாழில் தனியார் விடுதியொன்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியிலுள்ள பிரபல தனியார் விடுதியொன்றில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுமியை தவிர மற்றுமொரு பெண்ணும் மயக்கமான நிலையில் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தினை யாழ்.மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த சிறுமி திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.