tamilni 169 scaled
இலங்கைசெய்திகள்

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Share

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

இரத்தினபுரி – காவத்தை பெருந்தோட்ட நிறுவன – வெள்ளந்துரை தோட்டம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை அவை தொடர்கின்றன என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து அவசர மாநாடு நடத்தி நிரந்தரமான தீர்வை காணும் படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மனோ கணேசன்,

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன, பெருந்தோட்டங்களுக்கு உள்ளே செயற்பட முடியவில்லை எனவும் அரசியல் உயர் மட்டத்தில் பேசி நடைமுறை அதிகாரத்தை பெற்றுத் தாருங்கள் என தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண “இந்த கம்பனிகாரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று ஜனாதிபதியிடம் முறையிடும் படி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அனைத்து தரப்பினரையும் அழைத்து அவசர மாநாடு நடத்தி இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு நிரந்தரமான தீர்வை காணும்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மனோ கணேசன் கடிதம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி, பொது நிர்வாக அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண, பொலிஸ் துறை அமைச்சர் டிரான் அலஸ், அரசு-எதிரணி தரப்புகளை சார்ந்த ஒன்பது மலையக எம்பிக்கள், கொழும்பு-களுத்துறை-கேகாலை-இரத்தினபுரி-நுவரேலியா-கண்டி-மாத்தளை-பதுளை-மொனராகலை-காலி-மாத்தறை-குருநாகலை ஆகிய 12 மாவட்டங்களின் செயலாளர்கள், பொலிஸ் மா அதிபர், 22 பெருந்தோட்ட நிறுவன மேலாளர்கள், உள் குத்தகை பெற்றுள்ள தோட்ட நிறுவன மேலாளர்கள், 3 அரச பெருந்தோட்ட அதிகாரிகள், மலையக சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து அவசர மாநாட்டை நடத்தி நிரந்தர தீர்வை காணுங்கள்.

இரத்தம், வியர்வை சிந்த இந்நாட்டை வளப்படுத்திய பெருந்தோட்ட மக்கள், இன்று 200 வருடங்களை இந்நாட்டில் நிறைவு செய்கிறார்கள்.

இந்நாட்டுக்கு அவர்களின் அவர்களது குறைத்து மதிப்பிட முடியாதது. மலையக தமிழர்கள் மத்தியில் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற இம்மக்கள், எனது தொகுதி கொழும்பு – அவிசாவளை முதல் சுமார் பன்னிரெண்டு மாவட்டங்களில் படும்பாடு மிக மோசமானதாகும்.

நீதிமன்ற ஆணை இல்லாமல் அவர்களது வீடுகள் உடைக்கப்படுகின்றன. ஆங்காங்கே நடைபெற்ற சம்பவங்கள் இப்போது பரவலாக நடைபெறுகின்றன.

பல சம்பவங்கள் பகிரங்கமாவதில்லை. ஒரு சில வெளியில் தெரிய வருகின்றன. தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வசிப்பிட, வாழ்வாதர காணி உரிமை தொடர்பில் நாம் கூடி பேசி கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

அவை மாவட்ட செயலாளர்களுக்கும், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும். தயவு செய்து அவசர மாநாட்டை உங்கள் தலைமையில் கூட்டுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...