tamilni 170 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி

Share

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி

இலங்கைக்கு எதிராக ஒலிபரப்பப்பட்டுள்ள சனல்– – 4 காணொளி தொடர்பில் பிரிட்டன் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சனல்– – 4 காணொளி தொடர்பாக அரசாங்க புலனாய்வு பிரிவு பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முன்வைத்துள்ள முறைப்பாட்டிற்கிணங்க, பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் பல இடங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில், சனல்-04 அலைவரிசை அண்மையில் காணொளியொன்றை வெளியிட்டு, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக அதில் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.

தம்மால் இதற்கு முன்னர் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகளுடன் பதில் வழங்கப்பட்டுள்ள நிலையில், சனல்-04 அலைவரிசை மீண்டும் தன்னிச்சையாக தம்மை அசௌகரியத்துக்குட்படுத்தும் நோக்கில் இந்தக் காணொளியை வெ ளியிட்டுள்ளதாக சுரேஷ் சலே மேற்படி ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.

அதற்கிணங்கவே, மேற்படி காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த காணொளியை வெளியிடுவதற்கு முன்பதாக சனல்-04 அலைவரிசை கடந்த ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் இக்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை கேட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரிப்பதாகவும் மேற்படி சம்பவம் நடந்த காலத்தில், தாம் இலங்கையில் தங்கியிருக்கவில்லையென்றும் சுரேஷ் சலே அதற்கு மறுதினமே குறித்த தொலைக்காட்சி அலைவரிசைக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...