ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்த இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1, 51/1 தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான உரையாடலின் போதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான ஹிமாலி சுபாஷினி அருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை தொடர்பான பொறுப்புக் கூறல் திட்டம் நம்பகத்தன்மையற்ற ஆணை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Comments are closed.