rtjy 116 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 : சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை

Share

சனல் 4 : சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை

சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த படத்தொகுப்பில் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தன்னை சங்கடப்படுத்தும் வகையில் சனல் 4 இந்த காணொளியை ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்தில் சுரேஷ் சலே முறைப்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான சூழலில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்துள்ளது என சுரேஷ் சலேயின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த காணொளியை வெளியிடுவதற்கு முன், ஆகஸ்ட் 7ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் சனல் 4 ஊடகவியலாளர்கள் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக வினவியதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாகவும், அந்த காலப்பகுதியில் தான் இலங்கையில் தங்கியிருக்கவில்லை என்றும் சுரேஷ் சலே சனல் 4 இற்கு அடுத்த நாளே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...