rtjy 89 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சாணக்கியன்

Share

கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சாணக்கியன்

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து இயங்கிய திரிபோலி ப்ரோட்டன் குழுவை பாவித்து எங்களையும் கொலை செய்வார்களா என்ற பயம் உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மட்டக்களப் மாவட்டத்தில் மக்களுக்காகவும், உரிமைக்காகவும் பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி, நிலாந்தன், கிருஷ்ணா போன்றவர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்களது ஊடக கடமையை செய்து வருகின்றனர்.

இன்றும் அந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பிள்ளையான் போன்றவர்களால் அச்சுறுத்தப்பட்டு வருவதுடன் அவர்களுடைய உயிர்களுக்கு ஆபத்தும், உத்தரவாதம் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த நிலை என்றால் எங்களுக்கும் பயமாக இருக்கின்றது. காரணம் நானும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். கோட்டாபய ராஜபக்சவுடன் சேர்ந்து இயங்கிய திரிபோலி ப்ரோட்டன் குழுவை பாவித்து எங்களையும் கொலை செய்வார்களா என்ற அச்சம் எமக்கு உண்டு என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...