LOADING...

புரட்டாதி 6, 2023

கோட்டாபயவிற்கு தொடர்பு: சனல் 4 காணொளி தொடர்பில் அகிம்சா நம்பிக்கை

கோட்டாபயவிற்கு தொடர்பு: சனல் 4 காணொளி தொடர்பில் அகிம்சா நம்பிக்கை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு தொடர்பு இருக்க வேண்டும் என நான் பல வருடங்களாக கருதி வந்துள்ளேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல்4 இன் வீடியோவை பார்த்தபின்னர் ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

பலவருடங்களாக இந்த தாக்குதலிற்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தொடர்பிருக்கவேண்டும் என நான் கருதிவந்துள்ளேன்.

இது அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டிய மிக முக்கியமான படமாகும் என என குறிப்பிட்டுள்ளார்.

Prev Post

கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 இரகசியங்கள்

Next Post

இலங்கைக்கு இந்தியாவின் கிடுகுப்பிடி

post-bars