இலங்கை
1L எரிபொருளுக்கும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி
1L எரிபொருளுக்கும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி
எரிபொருள் விலையை அதிகரிப்பானது எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது மக்கள் மீது வரிச்சுமையை திணித்து மக்களை ஒடுக்குவதே ஒரே நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு லீற்றர் எண்ணெயிலிருந்தும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பு இல்லாத வேளையில் டொலரில் மாற்றம் இல்லாத வேளையில் எவ்வாறான விலை சூத்திரத்தை பயன்படுத்தி அதிகரிக்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளதென சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கூட்டுத்தாபனம் கடந்த மாதம் 60 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.