tamilni 28 scaled
இலங்கைசெய்திகள்

திட்டமிட்டு களமிறக்கப்படும் போலி சிங்கள துறவிகள்

Share

திட்டமிட்டு களமிறக்கப்படும் போலி சிங்கள துறவிகள்

இலங்கையில் 18 – 20 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து காவி உடை அணிவித்து அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் திட்டமொன்று அமுலில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவு தகவல் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, துறவு வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படும் இளைஞர்கள் போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் கவசமாகப் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவரை சுமார் 500 பேர் பயிற்சி பெற்று துறவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையில் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் அரசியல் கட்சி இருப்பதாக புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் தமது அரசியல் கருத்துக்களை பரப்பும் வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உரிய திணைக்களங்களின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரச உள்ளகமட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...