இலங்கை
அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணிலுக்கு கிடைத்துள்ள அதிகாரம்
அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணிலுக்கு கிடைத்துள்ள அதிகாரம்
நாடு ஸ்திரமற்ற நிலைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அடுத்த தேர்தல் வரைக்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான விரிவான அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது என வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள இந்த மக்கள் ஆணை நேரடியாகக் கிடைத்தது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்காகும். அந்தப் பதவிக்காலத்தின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதே பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும்.
அதற்குச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. நாடு ஸ்திரமற்ற நிலைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அடுத்த தேர்தல் வரைக்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான விரிவான அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.
அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நாமே தெரிவு செய்தோம். அவர் ஐ.தே.கட்சியின் தலைவராக இருந்தாலும் தற்போது அவர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஜனாதிபதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.