tamilni 410 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் தூதரகம்

Share

இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் தூதரகம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய பிரதமரை நியமிப்பதற்கான இரகசிய நடவடிக்கையை மேற்கத்திய தூதரகம் ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் முன்னாள் அதிபர் ஒருவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு இருப்பதாகவும் கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் தினேஷுக்கு பல சக்திவாய்ந்த அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரின் பதவியை மாற்றும் நடவடிக்கைக்கு பங்களித்த இந்த தூதரகம், தற்போதைய அதிபர் ரணிலை முன்னிலைப்படுத்துவதற்கான இரகசிய நடவடிக்கையையும் மேற்கொண்டதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்திருந்தன.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கரியமில வைப்பு கொள்கையின் கீழ் இலங்கைக்கு 12 பில்லியன் டொலர்கள் கிடைக்க உள்ளதாகவும், இது முன்னாள் நோர்வே சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தில் அதிபர் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நாட்டிற்கான மேற்கத்தைய தூதுவர் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாகச் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார், மேலும் அவர் இந்த நாட்களில் அரசியல் அரங்கில் முக்கிய நபராக மாறி வருகிறார்.

தினேஷ் குணவர்தன பிரதமர்பதவியில் இருந்து விலகி, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு அந்த பதவியை வழங்குமாறு பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கை இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆதரவு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இன்னும் அரசியல் களத்தில் இருப்பதுடன், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுப்பது விசேட அம்சமாகும் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...