rtjy 268 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள்

Share

இலங்கை அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள்

இலங்கை அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கின்றன. நாம் மக்கள் நின்றே தீர்க்கமான முடிவுகளை எடுப்போம் என பரபரப்புத் தகவலை வெளியிட்டார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பமா? கட்சியின் ஆண்டு விழா திட்டமிட்டவாறு நடைபெறுமா? என ஊடகவியலாளர்கள் பலர் என்னிடம் கேள்விகளைத் தொடுத்து வருகின்றார்கள்.

அந்தப் பிரச்சினைகளுக்குக் கட்சிகளின் தலைமைகள் தீர்வுகளைக் காணும். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்.

எனவே, எமது கட்சிக்குள் பிரச்சினைகள் இருந்தால் அதனை நான் தீர்த்து வைப்பேன். வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இலங்கை அரசியல் களத்தில் பாரிய குழப்பங்களுக்குச் சதித்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்று எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கட்சிகளின் உள்வீட்டு விவகாரங்களை ஆராயும் ஊடகவியலாளர்கள் பிரதான அரசியல் களத்தில் நடக்கும் – நடக்கப் போகின்ற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கின்றன என்று அறியமுடிகின்றது. எனினும், நாம் மக்கள் நின்றே தீர்க்கமான முடிவுகளை எடுப்போம் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...