இலங்கை
இறுதித் தோட்டா முடியும் வரை போராடியவர் விடுதலைப் புலிகளின் தலைவர்
இறுதித் தோட்டா முடியும் வரை போராடியவர் விடுதலைப் புலிகளின் தலைவர்
தனது துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் விடுதலைப்புலிகளின் தலைவர், இந்நிலையில், அவரையும் அவரது குடும்பத்தையும் வைத்துப் பிழைப்பு நடத்துகின்றார்கள் புலம்பெயர் தமிழர்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவரோ அல்லது அவரின் குடும்பத்தில் எவருமோ இன்று உயிருடன் இல்லை, இறுதிப் போரில் பங்கெடுத்த படைத் தளபதிகளில் ஒருவன் என்ற ரீதியில் இந்த உண்மையை மீண்டுமொரு தடவை கூறுகின்றேன்.
இறுதி யுத்தத்தில் இறுதி வரைக்கும் போரிட்டு தன் குடும்பத்துடன் சாவடைந்தவர் தான் விடுதலைப்புலிகளின் தலைவர், அவர் பயங்கரவாத அமைப்பின் தலைவர். ஆனால், அவர் தனது கொள்கையில் இறுதி வரைக்கும் மாறாமல் நின்ற ஒரு தலைவர்.