rtjy 258 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு மரணம்!

Share

கொழும்பு வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு மரணம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருப்பினும் குறித்த நபர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் நாளை (27) விசாரணை நடத்தப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அதுவரை குறித்த தடுப்பூசியை நோயாளர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் வெட்டுக்காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெட்டு காயத்திற்காக “Co-Amoxi-Clove” எனும் நோய் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்தியதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நோய் எதிர்ப்பு தடுப்பூசியை விடுதியில் உள்ள பல நோயாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த மருந்து தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் விசாரணை முடிவடையும் வரை இந்த தடுப்பூசியை கொழும்பு தேசிய வைத்தியசாலை பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த நோயாளியின் பிரேத பரிசோதனை நாளை இடம்பெறவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...